தொகுப்பு
இணையவழிக் கல்வி வானொலி குழு
நூல் அன்பளிப்பு
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
தொகுப்பு
இணையவழிக் கல்வி வானொலி குழு
நூல் அன்பளிப்பு
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
வழிபாட்டு கூட்டம் - Guide Person Photos - ClickHere
பள்ளி அளவில் மேற்கொள்ள வேண்டியது
நமது குழு மற்றும் அறக்கட்டளை சார்பாக பரிசாக வழங்கப்பட்டுள்ள புத்தகத்தில்,
தினசரி ஒரு குறள், பழமொழி, பொன்மொழி, விடுகதை, விரிவாக்கம், செய்திகள் என மொத்தம் 210 நாட்களுக்கு உரிய தொகுப்பு இதில் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு நாளும் வழிபாட்டு கூட்டத்திலும் இதனை பயன்படுத்தி ஒவ்வொரு மாணவருக்கும் வாய்ப்பு கொடுத்து
குறள், பழமொழி, பொன்மொழி, விடுகதை, விரிவாக்கம், செய்திகள் என தனித்தனி மாணவர்களாக வழிபாட்டு கூட்டத்தில் கூறச்செய்யவும்.
அவ்வாறு பங்கேற்கும் மாணவர்களின் பெயர்களையும், அன்றைய வழிகாட்டி பெயரையும் இப்புத்தகத்தில் கேட்கப்பட்ட உரிய இடத்தில் பதிவிடவும்.
தினசரி படிக்கப்பட்ட , தகவல் எழுதப்பட்ட அப்பக்கத்தை புகைப்படம் எடுத்து அதனை Google Drive ல் ஒரு Folderல் பதிவேற்றி வைக்கவும்..
பிறகு நம் இணையவழி கல்விவானொலி குழு பகிர்கின்ற Google Form மூலம் சமர்பிக்க வேண்டும்.
தன்னார்வ மாணவர்கள் செய்ய வேண்டியது
நமது குழு மற்றும் அறக்கட்டளை சார்பாக பரிசாக வழங்கப்பட்டுள்ள புத்தகத்தில்,
தினசரி ஒரு குறள், பழமொழி, பொன்மொழி, விடுகதை, விரிவாக்கம், செய்திகள் என மொத்தம் 210 நாட்களுக்கு உரிய தொகுப்பு இதில் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு நாளுக்குமான தகவல்களை:
[தினசரி ஒரு குறள், பழமொழி, பொன்மொழி, விடுகதை, விரிவாக்கம், செய்திகள்]
✍️ எழுதவும்
🎙 குரல் பதிவாக [Audio] உருவாக்கவும்
ஒவ்வொரு நாளின் மொத்த உள்ளடக்கத்தையும்
📄 தனித்தனி தாள்களில் எழுதவும்
🎧 தனித்தனி குரல் பதிவுகளாக [Audio] உருவாக்கவும்
இச்செயல்பாடுகளை ஒரே நாளில் அல்லது சில நாட்களில் முடித்து விடக்கூடாது.
ஒவ்வொரு நாளுக்குமான செயல்பாடுகளை
அந்தந்த நாளிலேயே மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு தொடர்ந்து செயல்பட்டால்,
210 ஆம் நாள் (கல்வியாண்டின் இறுதி – ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரம்) அன்று தான் முழுமையாக நிறைவு பெறும்.
இவ்வாறு மாணவர்கள் தன்னார்வமாக எழுதிய தாள் மற்றும் பேசிய ஆடியோக்களை வழிகாட்டிகளான ஆசிரியர் / பெற்றோர் தனது போனில் Google Drive ல் ஒரு Folderல் பதிவேற்றி வைக்கவும்..
பிறகு நம் இணையவழி கல்விவானொலி குழு பகிர்கின்ற Google Form மூலம் சமர்பிக்க வேண்டும்.
சிறப்பாக நிறைவு செய்கிற பள்ளிகளுக்கும் / மாணவர்களுக்கும்,
பரிசும் பாராட்டும் கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும்.
📌 ஒவ்வொரு பருவ முடிவிலும் மதிப்பீடு:
🗓 பருவம் 1 – செப்டம்பர்
🗓 பருவம் 2 – டிசம்பர்
🗓 பருவம் 3 – ஏப்ரல்
என ஒவ்வொரு பருவமும் முடிவடையும் போது, செயல்பாடுகள் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் பரிசிற்குத் தேர்வு செய்யப்படுவர்.