about us

கற்றலில் கேட்டலும் நன்று என்பதை அடிப்படையாகக் கொண்டு , இந்த கொரோனா நோய்த் தொற்று காலங்களில் என் வகுப்பு மாணவர்களுக்காக அவர்கள் வீட்டிலிருந்த படியே கற்றலில் இயல்பாக ஈடுபடுவதற்காக நான் செய்த முயற்சியான Online KalviRadio, தற்போது பல  ஆசிரியர்களின் (@KR-Team) பங்களிப்பால் ஒத்துழைப்பால் கூட்டுமுயற்சியால்  என் வகுப்பு , என் பள்ளி , என் ஒன்றியம் , என் மாவட்டம் என அனைத்தையும் தாண்டி தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளி மற்றும் அனைத்துப் பள்ளிகளின் 1-8ஆம் வகுப்பு மாணவர்களும்  பயன்படுத்துவதற்கான  ஏதுவான நிலையை எட்டியுள்ளது.

 

  மேலும் இது மாற்று முறைக்கான பரிந்துரை இல்லை, கற்பித்தலுக்கான Methodology இல்லை. இது கற்பித்தலுக்கும் , சுயகற்றலுக்கும் பயன்படும் ஓர் யுக்தி, தொழில்நுட்பம்(Technology).

இந்த Online KalviRadio மூலம் மாணவர்கள் பாடம் சார்ந்த கருத்துகளை எங்கேயும் , எப்போதும் கேட்கலாம் . இயன்ற நேரங்களில் அவர்களின் அறிவை  வலுப்படுத்தவும் , வளப்படுத்தவும் பயன்படுத்தலாம்.


Online KalviRadio-ன் சிறப்பம்சங்கள்

  தற்போதுள்ள ஊரடங்கு நேரங்களிலும், இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கற்றல் தடைபடாது வீட்டிலிருந்தபடியே இந்த Online Kalviradio வை பயன்படுத்தி மிக எளிய முறையில் தங்களின் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் / மேற்கொள்கின்றனர்.

  தன்னார்வமிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, இந்த Online Kalviradioவை தமிழகம் முழுவதும் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கியுள்ளோம். (Easily Implementable)

  1-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்பகுதிகள் & ஆர்வமூட்டும் அறிவுசார் வளர்ச்சிப்பகுதிகள் உண்டு. உடல்நலம் & மனநலம் பேணப்படுகிறது (Extensive Learning)

  மாணவர்கள் எளிதாக சாதாரண Browser Mobileகளையும் மற்றும் குறைந்த Network-லேயே இயக்கலாம். ஆகவே மலைக் கிராமங்களிலும் இயங்க ஏதுவாக உள்ளது (Also Works with simple browser Phone) (No need Android Phones & New APP  Installation) (Works even with 2G Speed)

  பெற்றோரின் கண்காணிப்பும், மாணவர்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படுகிறது. (Parental Control & Self-learning with Safe Learning)

  ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே இதற்கான Audio தயாரிப்பில் ஈடுபடலாம் / ஈடுபடுகின்றனர். (Can prepare even from home)

  காலநேர அட்டவணை (TimeTable) பின்பற்றப்படுகிறது. ஆகவே மாணவர்கள் திட்டமிட்டு கற்கின்றனர். (Students plan their Lessons)

  Playlist இருப்பதால் , மாணவர்கள் மீண்டும் மீண்டும் தேவையானவற்றை கேட்பதற்கான வசதியுள்ளது. (Can listen to many times whenever need)

  அடிப்படைத்திறன்களான (LSRW) மேம்படுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

  மெல்ல மலரும் மாணவர்கள் பாடப் பகுதிகளை பலமுறை கேட்டு கருத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது. (Boon for Late Bloomers)


  ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளுக்கு மிகுந்த பயன் அளிக்கும். இல்லம் தேடிக் கல்வி – தன்னர்வலர்களுக்கும் பயன்படும்.

  மாணவர்களும் தன்னார்வமாக பங்கேற்கின்றனர் ,  இதற்கான ஊக்கமும் , பாராட்டும் பெறுகின்றனர். (Appreciation & Certification)

  மாணவர்களும் , ஆசிரியர்களும் தங்களின் கற்றல் & கற்பித்தல் செயல்பாடுகளில் துணைகொள்ளும் வகையில் இந்த Online Kalviradio உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.


ONLINE KalviRadio-வினை பயன்படுத்துவது மிக எளிது:

மாணவர்கள் எளிதில் இயக்கி , கற்கலாம்

இந்த ONLINE KalviRadio இயங்குவதற்கு Android Phone / Smart Phone தான் தேவை என்றில்லை , Internet / Browser இருக்கும் மிக சாதாரண Phone-களே போதுமானது. 

ஆசிரியர்கள் இந்த ONLINE KalviRadioவிற்கான www.kalviradio.com Link  SMS / whatsapp வழியாகவே அனுப்பமுடியும். இந்த லிங்கை தொட்டாலே போதும் மாணவர்கள் அதனை எளிதாக இயக்கலாம்  அல்லது மேற்காணும் சிறிய URL யை  Browser-ல் பயன்படுத்தி  பாடங்களை கேட்கமுடியும். இதனால் மாணவர்கள் இதை குழப்பமின்றி எளிதாக பயன்படுத்துகின்றனர்.

TimeTable முறையை பின்பற்றுவதால் மாணவர்கள் திட்டமிட்டு பாடப்பகுதிகளை கேட்பதற்கும் ,  கற்பதற்கும் ஏதுவாக இருக்கிறது.

பாடங்களை கேட்டுக்கொண்டே கற்பதால் , வகுப்பறை சூழ்நிலை நிலவுகிறது. புத்தகங்களை முழுமையாக பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. எழுதிப் பார்க்கவும் வாய்ப்பு இருக்கிறது.

எங்கேயும் , எப்போதும் மாணவர்கள் வீட்டில் ஓய்வுநேரத்தில் அவர்களாகவே சுயகற்றலுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.

 

Mobile Storage & Internet DATA பற்றிய  கவலை இல்லை

இந்த ONLINE KalviRadio இயங்குவதற்கு வேறு தனிப்பட்ட எந்த Android Application களும் தேவையில்லை , Mobile ல் உள்ள Default Browser போதுமானது .

இதை இயக்க அதிவேக Internet  தேவையில்லை ,  குறைந்த / 2GNetwork-களே போதும். எனவே அதிக Internet DATA செலவாகாது.

உடல் நலம் & மன நலம் பேணப்படுகிறது

இந்த ONLINE KalviRadio பயன்படுத்துவதால் மாணவர்களின் செவிச்செல்வம் மேம்படுகிறது. இதனால் மொபைல் திரையை உற்று பார்க்க வேண்டிய நிலை இல்லை. மேலும் இதை நெடுநேரம் அமர்ந்துகொண்டே கேட்கவேண்டிய கட்டாயமில்லை, மாணவர்கள் அவரவர்களின் வேலையைச் செய்துகொண்டே இதை கேட்க முடிகிறது & பாடப்பொருள் அறிவை பெற முடிகிறது.

 

இதில் எந்த விளம்பர இடையுறும் கிடையாது , மேலும் மனநலத்தை கெடுக்கும் ஆபாச விஷயங்கள் குறுக்கிடாது. ஆதலால் மாணவர்களுக்கு எந்த தொல்லையும் இல்லை.

கதைகள் , பழமொழிகள் , விடுகதைகள் , பாடல்கள் , நற்சிந்தனைக்கருத்துகள் இடம்பெறுவதால் மனம் செம்மையாகிறது.

 

தேவையெனில் மீண்டும் கேட்க வசதி உள்ளது

இந்த ONLINE KalviRadio-வில் ஒலிபரப்பாகும் பகுதிகளை மாணவர்கள் தேவையான நேரத்தில் மீண்டும் மீண்டும் கேட்க வசதியாக Play List உருவாக்கி அதில் Class Wise, Subject Wise - Audio Lessons தொகுத்துள்ளோம்.

இதன் மூலம் மெல்ல மலரும் மாணவர்கள் பாடப் பகுதிகளை பலமுறை கேட்டு கருத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது.

 

மாணவர்க்கான பங்களிப்பும், பாராட்டும்

தான் கற்றதை பிறருக்கு சொல்வதன் மூலம் கற்றல் மேம்படுகிறது , மேலும் பலவற்றை கற்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது.

இதன் அடிப்படையில் மாணவர்களையும் பங்கெடுக்க வைத்து அவர்களையும் கதைகள் , விடுகதைகள், பழமொழி, திருக்குறள், வினா விடை என கூறச்செய்து அவற்றையும் ஒலிபரப்பு செய்கிறோம். அவர்களை ஊக்கப்படுத்த பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்குகிறோம்.

ONLINE KalviRadio-வில் ஆசிரியர்கள் பங்களிப்பது எளிது :

“ மனமிருந்தால் மார்க்கம் உண்டு “

இதற்கான தயாரிப்புகளில் ஈடுபட ஆர்வம் இருந்தாலே போதும். வேறு எதுவும் தடையில்லை. வீட்டிலிருந்தும், வகுப்பறையிலிருந்தும், வேலை நாளிலிலும், விடுமுறை நாளிலும் எளிமையாக அவரவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே பங்களிக்கலாம் .

    ஆசிரியர்களாகிய நாங்கள் பாடங்களை வீட்டிலிருந்தே எளிதாக MP3 fileஆக தயாரிக்கின்றோம். மேலும் யாரையும் எதிர்பார்க்காமல் தனிஒருவராகவே இத்தயாரிப்பில் ஈடுபடுகின்றோம்.

    இதற்கு தனிப்பட்ட Android Application தேவையில்லை, Computer தேவையில்லை, Software தேவையில்லை, எளிமையாக  Mobile ல் உள்ள Default Voice Recorder போதுமானது.

    Smart Phone / Android Phone தான் தேவை என்றில்லை , Voice Recorder மிக எளிய சாதாரண Basic Button Phone போதும்.

    அந்தந்த பாடஆசிரியர்கள் பாடப்புத்தகத்தை மூலமாக வைத்து தங்களின் ஓய்வுநேரத்தில் பாடக்கருத்தை முழுமையாக குறிப்பெடுத்து , அதனை ஒரிரு முறை சரிபார்த்த பின்னே Audio Files தயாரிக்கின்றோம் . அனைவரும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் என்பதால் பாடத்தை சரியான முறையில் கற்பிக்கின்றோம். இதனால் தகவல்களும், கருத்துகளும் நம்பகத்தன்மையோடு இருக்கிறது.

    Audio Recording மட்டுமே என்பதால் ஆசிரியர்கள் பாடக்குறிப்பை பார்த்தும் வாசிக்க வாய்ப்புள்ளது இது ஒரு சாதகமான சிறப்பான எளிய முறை என்பதால் அனைத்து ஆசிரியர்களும்  தயக்கமின்றி தன்னார்வமாக பங்களிப்பு அளிக்கின்றனர். இதனால் கருத்தில் தவறு ஏற்படாது , முழுமையாக பாடக்கருத்தை பதிவுசெய்கின்றனர். மேலும் பதட்டமின்றி இத்தயாரிப்புகளில் ஈடுபடுகின்றனர்..

 

    Online KalviRadioவிற்கான தயாரிப்புகளில் ஈடுபடுவதால் எங்களின் கற்பித்தல் பணியில் பாதிப்போ , தொய்வோ ஏற்படுவதில்லை. மாறாக இவற்றின் தயாரிப்புகளுக்கான செயல்பாடுகளில் ஈடுபடும் போது எங்களின் கற்பித்தலுக்கு தேவையான பாடக்கருத்துகளை பெறுகிறோம். அதனை வலுப்படுத்திக்கொள்கிறோம். மேலும் இதனை எங்களின் மாணவர்களுக்கும் பயன்படுத்திக்கொள்கிறோம்.

    இது ஒரு கூட்டு முயற்சி என்பதால் பாடப்பகுதிகளை முன்கூட்டியே திட்டமிட்டு பிரித்துக்கொண்டு தன்னார்வமாக ஒத்துழைப்பதால் நாங்கள் அவரவர்க்கு விருப்பமான பாடப்பகுதிகளின் Audio Files தயாரிக்கின்றோம்.

 புத்தக பூங்கொத்து  & நூலக புத்தகங்களை பயன்படுத்தி கதைகள், விடுகதை, பழமொழி, நற்சிந்தனை, பொதுஅறிவு தகவல்கள் போன்றவற்றை தொகுத்து Audio Files தயாரிக்கின்றோம்.

மேலும் தற்போது பாடப்புத்தகத்திலுள்ள QR-Code Video-களை MP3ஆக மாற்றி ,  அடிக்கடி ஒலிபரப்பு செய்து , மாணவர்களைக் கேட்கச்செய்கின்றோம். இதன்மூலம் புதிய பாடப்பகுதிகளின் கருத்துகள், தகவல்கள் வலுவூட்டப்படுகிறது .

முந்தைய பாடத்திட்டங்களுக்காக தயாரிக்கப்பட்ட தாயெனப்படுவது பாடல்களின் MP3-க்களையும் ஒலிபரப்பு செய்கிறோம். பாடல்களை அடிக்கடி மாணவர்கள் கேட்பதால் மனமகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போதுள்ள ஊரடங்கு நேரங்களிலும், இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கற்றல் தடைபடாது, அவர்களை வீட்டிலிருந்தபடியே கற்கச் செய்ய ஆசிரியர்களாகிய எங்களுக்கு மிக வசதியாக உள்ளது.

 

துறைரீதியான ஒத்துழைப்பும் உதவியும் கிடைக்கபெற்றால் ,

ONLINE KalviRadio -விற்கான செயல்முறையும் ,

அதனை செயல்படுத்துதலும் இன்னும் எளிது:

( Process, implementation)

    அரசுப் பள்ளி ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்தி இதனை 100% செயல்முறைப்படுத்தலாம். மிகப்பெரிய செலவீனங்களை ஏற்படுத்தாது.

    Mobile Phones, Computer, Laptop போன்ற அவரவர்களிடம் உள்ள வளங்களைப் பயன்படுத்தியே எளிமையாக அவரவர்கள் வீட்டிலிருந்த படியே அல்லது பள்ளிக்கூடங்களில் இருந்தபடியே இதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

    எளிய வழிகாட்டுதல் மூலம் ஆசிரியர்களின் பங்களிப்பையும் , ஒத்துழைப்பையும் ஒருங்கமைத்து செயல்முறைப்படுத்தலாம். பெரிய அளவில் பயிற்சிகள் அளிக்க அவசியமில்லை.

    TimeTable பின்பற்றப்படுவதால் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலமே தினசரி மாணவர்களை அறிவுறுத்தி, அவர்களின் கற்றலுக்கு பயன்படுத்தச் செய்வது மிக எளிது . எந்த குழப்பமும் இல்லை.

    மாணவர்கள் வீட்டிலிருந்த படியே கற்பதால் பெற்றோர்களின் நேரடி கண்காணிப்பிற்கு வாய்ப்பாக அமையும். ஆசிரியர்கள் அவ்வப்போது மாணவர்களை தொடர்புகொண்டு, அவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைக்கச் செய்யலாம்.

    “மாணவர்களை அவர்களுக்கான பகுதிகளை கேட்டு , பின் புத்தகத்தை பயன்படுத்தி தனது ஏடுகளில் எழுதி , அதனை புகைப்படம் எடுத்து அனுப்புவதற்கு அறிவுறுத்தப்படவேண்டும். அதனை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து திருத்தம் மேற்கொண்டு மாணவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்” – இதுபோன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு வழிகாட்டி ,  கற்றல் கற்பித்தல் நிகழ்வை முழுமைப்படுத்தலாம்.

    தற்போது Online KalviRadioவில் 1-10ஆம் வகுப்புகளுக்கான பகுதிகள் ஒலிபரப்பாகிறது. இதனையே தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களும் கற்றலுக்கு பயன்படுத்த முடியும்.எனினும் இன்னும் சிறப்பாக மாணவர்கள் பயன்படுத்த ஏதுவாக வகுப்புவாரியாக Online KalviRadio-வை விரிவுப்படுத்துவதும் சுலபம்.

 

    Online KalviRadioவிற்கான Audio Preparation மேற்கொள்வதற்கு சில வழிகாட்டுதல்களுடன் ஒன்றியம் வாரியாக ஒரு TEAM உருவாக்கி , விருப்பப்படும் அந்தந்த  பாட ஆசிரியரையே பயன்படுத்திக்கொள்ளலாம் , மாணவர்களையும் பங்கேற்கச்செய்யலாம்.

    இத்தகைய செயல்முறைகளை செயல்படுத்துதவதற்கான  குழுக்களை உருவாக்கி , படிநிலைகளை வகுத்து ஒழுங்குமுறையை மேற்கொள்ளலாம்.

திட்டமிடல் (Planning)

தயாரித்தல் (Preparation)

கண்காணித்தல் (Monitoring)

ஒலிபரப்புதல் (Broadcasting)

பகிர்தல் (Sharing)

ஊக்குவித்தல் (Motivation)

வழிகாட்டுதல் (Guidance)

பின்தொடர்தல் (Follow-up)

மதிப்பிடுதல் (Evaluation)

பாராட்டுதல் (Appreciation & Certification)


Achievements & Performance

Online KALVIRADIO (Jan 2021) ஒலிபரப்பு – 11மாதங்கள் 

10 லட்சம் முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

30,000 Hoursக்கு மேல் இயக்கப்பட்டுள்ளது.

2,80,000 Unique IP பதிவாகியுள்ளது.

24 x 7 - Online KalviRadio Playlist

2லட்சம் முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது

சராசரியாக தினமும் – 100 Hours பயன்படுத்துகின்றனர்

தன்னார்வ ஆசிரியர்கள் 

138க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் (29 மாவட்டங்கள் )

தயாரித்து & தொகுத்தவை – Approx., 10,000 Audio Files

பாராட்டு சான்றிதழ்கள் பெற்றவர்கள்  – 3000 மாணவர்கள்.

மாணவர் பகுதியில் பங்கேற்றவர்கள்- 2000 மாணவர்கள்.

Trophies பெற்றவர்கள் – 120 ஆசிரியர்கள்  & 400 மாணவர்கள்

 

நேரடியாக Online KalviRadio Updates தகவல் பெறும் பயனாளர்கள்

TeleGram குழு-ல்  2300 பயனாளர்கள்  & District Wise Whatsapp குழு-ல்  10,000க்கும் மேற்பட்ட பயனாளர்கள் இணைந்துள்ளனர்

By KR-Team Teachers

அரசுப் பள்ளி & அனைத்துப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி..

நல்லாசிரியர் ஆ.கார்த்திக்ராஜா,

Cell - 7904163487

 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -கத்தாழை ,

புவனகிரி ஒன்றியம் -கடலூர் மாவட்டம்.